அமைச்சர் செல்லூர் ராஜு தர்ணா போராட்டம்
தான் பதிவு செய்த வாக்குக்கான சிலிப் வராததால் அமைச்சர் செல்லூர் ராஜு வாக்குச்சாவடியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் செல்லூர் மீனாட்சி அரசு பெண்கள் கலைக் கல்லூரியில் வாக்களிக்க வந்தார்.
அப்போது அவர் வாக்களித்ததற்கான சிலிப் வராமல் இருந்துள்ளது, இதனால் அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டதுடன் அங்கேயே அமர்ந்து கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார். இதன் பின்னர் மண்டல அதிகாரி, சம்பந்தப்பட்ட வாக்குசாவடிக்கு வந்து, செல்லூர் ராஜுவின் வாக்கு பதிவாகியுள்ளதை உறுதி செய்தார்.
இதனையடுத்து அவர் அங்கிருந்து கிளம்பி சென்றார், இதனால் சுமார் 15 நிமிடங்களில் வாக்குபதிவு தாமதமானது குறிப்பிடத்தக்கது.