வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் அமைச்சர் செல்லூர் ராஜ்!
மதுரை மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செல்லூர் ராஜ், பா.ம.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகளுடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜெய் ஹிந்திபுரம் பகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜ் தேர்தல் பரப்புரையை துவக்கினார். அப்போது பா.ம.க சார்பில் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில் வேட்பாளருக்கு மாலை அணிவித்து வரவேற்பு செய்தனர்.
தொடர்ந்து பா.ம.க பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தமிழக அரசின் சாதனைகளை எடுத்து கூறியும் வருங்கால திட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கையை எடுத்து கூறி வாக்கு சேகரித்தார். அதைத்தொடந்து பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் தேனீர் கடைக்கு சென்று பொதுமக்களுடன் சேர்ந்து தேனீர் அருந்தி மகிழ்வித்தார்.