நகைக்கடன் ரத்து செய்யப்படுமா? - அமைச்சர் செல்லூர் ராஜு பதில்
india
world
Minister
By Jon
நகைக்கடன் ரத்து செய்யப்படுமா என்று நிருபர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார். நகை கடன் ரத்து அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஏன் இன்னும் அரசாணை வெளியிடப்படவில்லை என கேள்வி எழுப்பினர். இது குறித்து மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அதற்குரிய ஆணை முதலமைச்சர் ஆன பின் வெளிவிடுவார் என தெரிவித்தார்.
அதற்கு செய்தியாளர்கள், முதலமைச்சர் ஆனால் தான் நகை கடன் ரத்துக்கு அரசாணை வெளியிடப்படுமா? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், அதுகுறித்து நகை கடன் ரத்து தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அவர்கள் அனுமதி வழங்கிய பிறகு அரசாணை வெளியிடப்படும் என கூறினார்.