வாக்குறுதியை நிறைவேற்றிய வரலாறு திமுகவுக்கு கிடையாது - அமைச்சர் செல்லூர் ராஜூ
வாக்குறுதியை நிறைவேற்றிய வரலாறு திமுகவுக்கு எப்போதும் கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றச்சாட்டியிருக்கிறார். மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்லூர் ராஜூ, ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் தேர்தல் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார்.
அதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசியதாவது - எதிர்க்கட்சி தலைவர் அறிவித்திருக்க திட்டங்கள், பொதுவாக தேர்தலில் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியதாக திமுகவுக்கு வரலாறு கிடையாது. இரண்டு ஏக்கர் நிலம் தருகிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் ஒன்றும் தரவில்லை, அந்த நிலைதான் தற்போதும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் எதாவது அறிவிப்பார்.

எனவே, திமுகவின் தேர்தல் அறிக்கை பொறுப்படுத்தமாட்டார்கள் என்று நினைக்கிறன். பெண்களின் வாக்குவங்கியை பெரும் நோக்கில் பொய்யான நாடகத்தை திமுக தேர்தல் அறிக்கை வழியாக தெரிவித்திருக்கிறது என்றார். து உள்ளதாக விமர்ச்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.