நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை - செல்லுராஜு காட்டம்!
பெரும்பான்மையுடன் இருந்த பாஜக அரசை மைனாரிட்டி அரசாக மாறியதற்கு காரணமே அண்ணாமலை போன்ற தலைவர்கள்தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
செல்லூர் ராஜு
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர்,''நடிகர்களை பற்றி விமர்சனம் செய்யும் அமைச்சர் தா .மோ.அன்பரசன் திமுக குடும்பத்தினரையும் மறைமுகமாக சாடியுள்ளார். அவருக்கு இன்னும் அரசியலே தெரியவில்லை என கூறினார் .
அண்ணாமலை
தொடர்ந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் என்றும் தனக்கு அவரை பிடிக்காதும் என்று கூறினார். மேலும் வாய்க்கொழுப்புடன் பேசும் அண்ணாமலை இருக்கும் வரை பாஜக சாமியாராக தான் போகும் என்று தெரிவித்த அவர்,''
பெரும்பான்மையுடன் இருந்த பாஜக அரசை மைனாரிட்டி அரசாக மாறியதற்கு காரணமே அண்ணாமலை போன்ற தலைவர்கள் தான்'' என கடுமையாக விமர்சித்தார்.