”அடுத்து உங்க வீட்டுல தான் ரெய்டு” செல்லுார் ராஜுவை மறைமுகமாக எச்சரித்த அமைச்சர் பிடிஆர்

Minister PTR Palanivel Thiagarajan Sellur K. Raju
By Thahir Sep 17, 2021 09:25 AM GMT
Report

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், 3 அமைச்சர்கள் ஊழல் செய்து சம்பாதிப்பதற்காகவே ஸ்மார்ட் சிட்டி திட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

”அடுத்து உங்க வீட்டுல தான் ரெய்டு” செல்லுார் ராஜுவை மறைமுகமாக எச்சரித்த அமைச்சர் பிடிஆர் | Sellur K Raju Palanivel Thiagarajan Minister

தேவைக்கும், ஜனநாயகத்துக்கும் முரணாக ஸ்மார்ட் சிட்டி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து தணிக்கை செய்யப்பட்டு, தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ, "மதுரையில் ஸ்மார்ட் சிட்டி உட்பட எந்த வளர்ச்சி திட்டத்திலும் தவறு நடக்கவில்லை.

ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் 75% நிதி அமைச்சரின் தொகுதியில் தான் நடைபெறுகிறது. சட்டம் உங்கள் கையில் உள்ளதால் தவறு செய்தவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடப்பதால் செல்லூர் ராஜு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை கண்டறிவது பெரிய வித்தை இல்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட் சிட்டி பணியில் முறைகேடு நடந்திருந்தால் நிரூபியுங்கள் என செல்லூர் ராஜூ கூறியதற்கு நிதியமைச்சர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது கவனிக்கத்தக்கது.