அடுத்த தலைமுறை விஜய் தான் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? - செல்லூர் ராஜு
நடிகர் விஜய் அரசியல் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் பரிசு
மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வில் நடிகர் விஜய், அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள் என பேசியிருந்தார். இதனையடுத்து அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்னோட்டமாக தான் இப்படி பேசியிருக்கிறார் என பரபரப்பாக பேசப்பட்டது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து பிரபல அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துவருகிறார்கள். இந்த நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இதுகுறித்து பதிலளித்துள்ளார்.
செல்லூர் ராஜு கருத்து
செல்லூர் ராஜு பேசியதாவது, அடுத்த தலைமுறை விஜய் தான். அவர் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? ஒரு தமிழராக விஜய் தன்னுடைய சொந்த பணத்தை, 13 மணி நேரம் நின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கொடுத்துள்ளார்.
யார் யாரோ தங்களை பிரதமர் என்றும், முதலமைச்சர் என்றும் சொல்லிக்கொள்கின்றனர். அப்படி இருக்கும்போது விஜய் ஏன் வரக்கூடாது? அவர் அரசியலுக்கு வருவதையும், வளர்வதையும் வாழ்த்த கடமைப்பட்டுள்ளோம். அவர் எங்களுக்கு போட்டியாக வருவாரா என்று சொல்ல முடியாது. எங்களுக்கு போட்டி திமுக தான்'' என்றார்.