தன்னோட படம் மட்டும் ஐந்து மொழிகளில் சூர்யா சரியான சுயநலமி : எச். ராஜா கடும் தாக்க்கு

suriya hraja selfish
By Irumporai Nov 03, 2021 11:30 PM GMT
Report

 இருளர் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக எடுக்கப்பட்ட  ஜெய் பீம் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ஜெய் பீம் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ,இந்த படத்தின்  ஒரு காட்சியில் போலீஸ் அதிகாரி பிரகாஷ்ரஜ் விசாரணையின் போது ஒரு ( சேட்)நகை வியாபரி  கன்னத்தில் ஓங்கி அறையும் போது, ஏன் சார் அடிச்சீங்க என்று அவர் தமிழ் பேசுவார்.

தன்னோட படம் மட்டும் ஐந்து மொழிகளில் சூர்யா சரியான சுயநலமி :  எச். ராஜா கடும் தாக்க்கு | Selfish Surya H Raja Struck Hard

அப்போது பிரகாஷ்ராஜ், தமிழில் பேசு என்று சொல்வார். அதன் பின்னர் அந்த சேட்டு தமிழ் பேசுவார். இந்த காட்சி வலைத்தளங்களில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது

இந்தி திணிப்புக்கு எதிராக இந்த காட்சி அமைந்திருக்கும் நிலையில் சூர்யா அடுத்து நடிக்கவிருக்கும் வாடிவாசல் படத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் இடம்பெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது

 இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா, தனது ட்விட்டர் பாகத்தில் நடிகர் சூர்யாவினை சுய நலமி என விமர்சித்துள்ளார்.

நம் குழந்தை 3 மொழி படிக்கக் கூடாது என்றவர் தன் படத்தை 5 மொழிகளில் வெளியிடுவாராம். சுயநலமிகளை புரிந்து கொள்வோம் எனக் கூறியுள்ளார்.