செல்பி மோகத்தால் ஒற்றை குழல் துப்பாக்கிக்கு இறையான மருமகள்!
துப்பாக்கியுடன் செல்பி எடுக்க முயன்ற பெண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் குப்தா இவர் தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கியை வைத்திருந்தார்.இந்தநிலையில் ஒற்றை குழல் துப்பாக்கியை அவரது மருமகள் ராதிகா கையில் வைத்தப்படி செல்பி எடுத்துள்ளார்.
தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவர் துப்பாக்கியை தன் முன் நிறுத்திய படி விசையில் கை வைத்தப்படி செல்பி எடுத்துள்ளார்.
அப்போது எதிர்பாரத விதமாக துப்பாக்கி விசையில் கை அழுத்தியதால் குண்டு பாய்ந்து ராதிகா பாரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் பற்றி அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.