தானாக நகரும் பாறைகள் - மரணப்பள்ளத்தாக்கின் மர்மங்கள்
அமெரிக்காவில் உள்ள தேசிய பூங்காவில் உள்ள மரணப்பள்ளத்தாக்கில் உள்ள பாறைகள் தானாக நகருவதாக கூறப்படுகிறது.ஏன் அப்படி நடக்கிறது என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
நகரும் பாறைகள்
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் உள்ள மரணப்பள்ளத்தாக்கு உலகிலேயே வெப்பமான இடங்களில் ஒன்று. இது வட அமெரிக்காவிலேயே வறண்ட இடமென்று இதனைக் கூறிப்பிடுகின்றனர்.
வறண்ட அந்த நிலத்தில் பந்தையம் செய்யும் பாறைகளை பின்னிருந்து தள்ளவோ அல்லது முன்னிருந்து இழுக்கவோ எந்த விசையும் கிடையாது. ஆனால் இந்த பாறைகள் எப்படி நகர்கின்றன? 200 கிலோ வரை எடைக்கொண்ட கற்கள் கூட 1000 அடி வரை நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நகரும் பாதைகளுக்கு பின்னால் பல புராண கதைகளும் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கும் ஏலியன்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. பாறைகள் நகருவதை 2014 ஆம் ஆண்டு வரை கண்ணால் பார்த்தவர்கள் யாரும் இல்லை. இது சில தருணங்களில் மட்டுமே நகர்கின்றது.
யாரும் பார்க்கவில்லை
குறிப்பாக மழைக்கு அடுத்த குளிர்காலத்தில் இந்தப் பாறைகள் அதிகமாக நகர்கின்றன. அப்போதைய காலக்கட்டத்தில் பிளேயா ஆற்றின் மேல் பனிப் பொழிவு ஏற்பட்டிருக்கும். அப்போது பலத்த காற்று வீசினாலும் அதனால் பெரும்பாறையை நகர்த்த முடிகிறது.

மற்ற ஏதாவது ஒரு ஆண்டில் காலநிலை தவறினாலும் இந்த பாறைகள் ஒரு இன்ச் நகர்த்துவது கூட முடியாத காரியமாகிவிடும். பாறைகள் நகர்வதை கண்கூடாக பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைவு தான் என்றாலும், ஆனால் அந்த பாறைகள் நகர்ந்து வந்த பாதைகளை மட்டும் காண முடியும்.