அமைச்சர் சேகர்பாபுவுக்கு உள்ள ஒரு பாஷா இருக்குறாரு : நடிகர் ரஜினிகாந்த்
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவரது 70 வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை எனும் தலமைப்பில் முதலமைச்சர் ஸ்டாலினின் 70 ஆண்டுகால பயணம் பற்றிய புகைப்பட தொகுப்பு இடம்பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் பார்வை
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் யோகி பாபு உள்ளிட்டோர் இந்த புகைப்பட கண்காட்சியினை பார்வையிட்டார், அவருடன் அமைச்சர் சேகர் பாபு உடனிருந்தார், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்.
சேகர் பாபுவுக்கு வேறு முகம் இருக்கு
என் இனிய நண்பர்முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாழ்க்கை பயணம், அரசியல் பயணம் ஆகிய இரண்டுமே ஒன்று தான். கட்சியில் உழைத்து படிப்படியாக பல பதவிகளை வகித்து தற்போது முதலமைச்சராக இருக்கிறார் என்று சொன்னால், மக்கள் அவர் உழைப்புக்கு அளித்த அங்கீகாரம் என கூறினார்.
மேலும், அமைச்சர் சேகர் பாபு ரொம்ப விசுவாசமானவர், அன்பானவர், சேகர்பாபுவுக்கு பாட்ஷா போல இன்னொரு முகம் இறுக்கு என கூறினார்.