சீமான் கட்சி ஜெயிக்காது , சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் : அமைச்சர் சேகர்பாபு

Seeman Erode
By Irumporai Feb 06, 2023 08:51 AM GMT
Report

சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் அதேபோல் ஈரோட்டில் சூரியன் தான் மலரும் என்றும் சூரியன் மேற்கில் உதிக்காது அதேபோல் சீமான் கட்சி ஜெயிக்காது என்று அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் சேகர் பாபு

இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் வெற்றி வாய்ப்பு குறித்து அவர் பேசிய போது சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் எனவே சூரியன் ஈரோட்டில் மலரும் என்று தெரிவித்துள்ளார் .

சீமான் கட்சி ஜெயிக்காது , சூரியன் கிழக்கில் தான் உதிக்கும் : அமைச்சர் சேகர்பாபு | Sekhar Babu Says About Erode Election

சீமான் கட்சி ஜெயிக்காது 

அதே சமயம், கருணாநிதியின் பேனா சின்னத்தை உடைப்பேன் என சீமான் கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் கூறிய அமைச்சர் சேகர் பாபு ஏற்கனவே அதற்கு நான் பதில் சொல்லிவிட்டேன் மீண்டும் ஒரு பதில் தேவை இல்லை என்று கூறிய அவர் சூரியன் எப்போதும் மேற்கில் உதிக்காது அதுபோல் சீமான் கட்சியும் ஜெயிக்காது என்று தெரிவித்தார்.

மேலும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பாலகிருஷ்ணன் கருணாநிதி பேனா நினைவு சின்னத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் அவருடைய அறிக்கையில் உள்ள ஒரே ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு கேள்வி கேட்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.