" இது ஆரம்பம் தான் வேட்டை இனிமேதான் " - வார்ரினிங் கொடுக்கும் அமைச்சர் சேகர்பாபு
கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும் என் அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கொசப்பேட்டை கந்தசாமி கோயில் மற்றும் ஆதி மொட்டையம்மன் கோயில் குளம் ஆகிய இடங்களில் இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்ளிடம் பேசிய அவர், "400 ஆண்டுகளுக்குமேல் பழமையான இந்த கோயிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சுத்தமான தண்ணீர் ஆகியவை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும்.
கோயில் வளாகத்திற்கு உள்ளாகவே திருத்தேர் உலா வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்,
மேலும் குயின்ஸ்லேண்ட் விவகாரத்தில் இடத்தின் உரிமையாளரிடம் சமரசம் செய்ய இது ஒன்றும் பஞ்சாயத்து அரசு இல்லை. நீதிமன்றம் இறுதி தீர்ப்பு எட்டப்படவில்லை என்பதால் அந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ளவில்லை.
இதுவரை 410 ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து ரூ.1789 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில் நில ஆக்கிரமிப்புகளை மீட்டெடுக்கும் வேட்டை தொடரும்.
திமுக இந்துக்களுக்கும் ஆன்மீகத்திற்கும் எதிரான இயக்கம் என்பதனை போன்று சிலர் பிம்பத்தை உருவாக்கியுள்ளனர். ஆனால் ஸ்டாலின் முதல்வரான பின்பு அந்த பிம்பம் தகர்க்கப்பட்டுள்ளது என கூறினார்.