தமிழக கோவில்களின் சொத்து விவரங்கள் இணையத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற போது அறநிலையத் துறை அமைச்சராக சேகர் பாபு தேர்வு செய்யப்பட்டார்.
அரசு கோவில்களை விட்டு வெளியேறி கோவில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனத் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சேகர் பாபு அறநிலைத்துறை அமைச்சராக பதவியேற்றார். கோவில் அடிமை நிறுத்து பிரச்சாரத்தை முன்னெடுத்து வரும் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தின் முறைகேடுகள் பற்றி விசாரிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
தற்போது இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகளோடு அமைச்சர் சேகர்பாபு முக்கியமான சந்திப்பை மேற்கொண்டார்.
அதன் பின்னர், “அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் நிலங்கள், கட்டடங்களின் விவரங்கள், கோயில் நிர்வாகம், அலுவலர்கள், திருப்பணிகள், விழா போன்ற தகவல்களை மக்கள் பார்க்கும் வகையில் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்” என அமைச்சர் பி.கே சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.