எப்போது திறக்கப்படுகிறது கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - சேகர் பாபுவின் முக்கிய அறிவிப்பு..!!
பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என அமைச்சர் சேகர் பாபு தகவல் அளித்துள்ளார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே அனைத்து பேருந்துகளும் புறப்படுவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படுகிறது. இதன்காரணமாக, ஊரப்பாக்கம் அருகே உள்ள கிளாம்பாக்கத்திலில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் புறப்படும் வகையில் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் கடந்த 2019-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட சுமாா் 88 ஏக்கா் நிலத்தில் ரூ.400 கோடி செலவில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. எப்போது திறக்கப்படுகிறது சில மாதங்களுக்கு முன்பாகவே இந்த பேருந்து நிலையம் திறக்கப்படுவதாக இருந்த நிலையில் கனமழையின் காரணமாக திறப்பு தள்ளிப்போனது.
எப்போது திறக்கப்படுகிறது
இந்நிலையில், பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு தகவல் அளித்துள்ளார். அதன் படி வரும் ஜனவரி 15-ஆம் தேதியன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படுகிறது.
இந்த பேருந்து நிலையத்தில் இருந்து 2310 இயக்கப்படும் என்றும் சுமார் 1 லட்சம் பேர் பயன்படுத்தும் வகையில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையத்தில் 270 கார்களும், 3500 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையிலும் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.