ரெட் லைட் ஏரியாவா? இவரெல்லாம் முதிர்ந்த அரசியல்வாதியா - சேகர்பாபு தாக்கு!

DMK Chennai K. Annamalai P. K. Sekar Babu
By Sumathi Feb 21, 2025 10:30 AM GMT
Report

அண்ணாமலையை அமைச்சர் சேகர் பாபு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணா அறிவாலயம்

பாஜக - திமுக இடையே மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் கடுமையான வார்த்தை மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், அமைச்சர் சேகர் பாபு சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

sekar babu - annamalai

அப்போது பேசிய அவர், "அண்ணாமலை கர்நாடகாவில் போலீசாக இருப்பதைப் போல நினைத்துக் கொண்டிருக்கிறார். இது கர்நாடக அல்ல. அண்ணா சாலை பகுதியில்தான் அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள செங்கற்களை ஒவ்வொன்றாக பிடுங்குவேன் என்று கூறியிருந்தார்.

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்; அதிமுகவுடன் கை கோர்க்கும் பாமக? என்ன காரணம்!

அன்புமணிக்கு ராஜ்யசபா சீட்; அதிமுகவுடன் கை கோர்க்கும் பாமக? என்ன காரணம்!

சேகர்பாபு தாக்கு

அதற்கு தான் அண்ணாசாலை பக்கம் வரட்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அந்த பதிலை சொல்லி இருந்தார். தெம்பு இருந்தால், திராணி இருந்தால், தைரியம் இருந்தால் அண்ணா சாலையில் அமைந்துள்ள அறிவாலயத்தில் உள்ள ஒரு செங்கல்லையாவது தொட்டு பார்க்கட்டும்.

ரெட் லைட் ஏரியாவா? இவரெல்லாம் முதிர்ந்த அரசியல்வாதியா - சேகர்பாபு தாக்கு! | Sekar Babu Harsh Reaction To Annamalai

திமுக நீர் பூத்த நெருப்பாக உள்ள இயக்கம். நேற்று பெய்த மழைக்கு முளைத்த காலான் அல்ல திமுக. இரும்பு முதல்வர் ஸ்டாலின் மிசாவையே சந்தித்தவர். திருமணமான கையோடு மிசாவில் சிறைக்கு சென்றவர். அவர்கள் தலைமையில் லட்சோப லட்சம் தொண்டர்கள் உள்ளனர்.

கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள் இப்படி பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை, அறிவாலயத்திற்கு இயக்கத்தில் சேர வரலாம். அவர் நட்பு பாராட்ட வரலாம். அவர் செங்கல்லை பிடுங்குவேன் என்று கூறினால் எப்படி அவரை அனுமதிக்க முடியும்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.  

மேலும், பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்தவர், ஒரு முதிர்ந்த அரசியல்வாதி, அப்பா தாத்தா ஸ்தானத்தை அடைந்தவர். c என்று கேட்டால் அவருடைய எண்ணம் எப்படி உள்ளது என்பதை தெரிகிறது எனத் தெரிவித்துளார்.