வேலூரில் வெவ்வேறு இடங்களில் பல லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்
வேலூரில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 11 லட்சத்து 13 ஆயிரத்து 228 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மக்கான் பகுதியில் இன்று தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அன்புராஜ் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்து 29 ஆயிரத்து 715 ரொக்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.


பறக்கும் படையினர் சோதனை அதே போன்று இன்று தேர்தல் பறக்கும் படையினர் வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற பாஸ்கர் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 7 லட்சத்து 83 ஆயிரத்து 513 ரொக்கம் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
இருவேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 11 லட்சத்து 13 ஆயிரத்து 228 ரூபாய் பணம் வேலூர் கோட்டாட்சியர் கணேஷிடம் இன்று ஒப்படைக்கப்பட்டு மாவட்ட கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.