வீட்டில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடிப்பொருட்கள் பறிமுதல் - போலீசார் நடவடிக்கை
விருத்தாச்சலத்தில் அனுமதி இல்லாமல், வீட்டில் பதிக்கி, வைக்கப்பட்டிருந்த தீபாவளி பட்டாசு வெடிப்பொருட்களை பறிமுதல் செய்த காவல்துறையினர்.
பட்டாசுகள் பறிமுதல்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் பகுதிகளில், அனுமதி இல்லாமல், தீபாவளி பட்டாசு வெடிப்பொருட்கள் பதிக்க வைக்கப்படுவதாக திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
ரகசிய தகவலின் அடிப்படையில் விருத்தாச்சலம் காந்திநகர் பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி ஆசிரியர் அருள்ஜோதி வீட்டில் சோதனை மேற்கொண்டபோது, சுமார் 50,000 மதிப்புள்ள பட்டாசுகள் இருப்பது கண்டறியப்பட்டது.
உடனடியாக விருத்தாச்சலம் காவல்துறையினர் விரைந்து வந்து, அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் அனுமதி இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்து, அருள்ஜோதி மீது வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.