அதிபர் ராஜபக்சே வீடு முற்றுகை...வீதியில் இறங்கிய பொதுமக்கள் - இலங்கையில் தொடர் பதற்றம்..!

President House MahindaRajapaksa போராட்டம் இலங்கை Seige மகிந்தராசபக்ச
By Thahir Mar 31, 2022 08:07 PM GMT
Report

இலங்கையில் பொருளாதாரம் அதளபாதளத்திற்கு சென்றுவிட்ட நிலையில் மக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

கொரோனா தொற்றால் உலக நாடுகள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. சுற்றுலா துறையை பெரும்பாலும் நம்பி இருந்த இலங்கை தற்போது பொருளாதாரத்தில் கடும் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது.

அதிபர் ராஜபக்சே வீடு முற்றுகை...வீதியில் இறங்கிய பொதுமக்கள் - இலங்கையில் தொடர் பதற்றம்..! | Seige President Rajapaksa S House Srilanka

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ள நிலையில் அமெரிக்கா டாலருக்கான இலங்கை ரூபாயின் மதிப்பு 256 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்நிலையில் சர்க்கரை கிலோ ரூ.215 உருளைக் கிழங்கு கிலோ ரூ.300, பெரிய வெங்காயம் கிலோ ரூ.400 என அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணைத் தொட்டுள்ளது.

இதனால் இலங்கை மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார நெருக்கடியால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த துணை ராணுவ போலீஸ் பிரிவு,சிறப்பு அதிரடிப்படை வரவழைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே வீட்டை முற்றுகையிட முயன்ற போது போராட்டக்காரர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீதும் அவர்களது வாகனத்தின் மீதும் போராட்டக்காரர்கள் பாட்டில்கள் வீசியும்,கற்கள் வீசியும் தாக்க தொடங்கினர். இதையடுத்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர்.    

இந்நிலையில் பல இடங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.