சொதப்பும் ஃபார்ம்...நீ ஒன்னும் கில்கிறிஸ்ட் இல்லை - உன் தகுதிக்கு ஆடு!! சரமாரியாக சாடிய சேவாக்!!

Indian Cricket Team Bangladesh Cricket Team Virender Sehwag Shakib Al Hasan
By Karthick Jun 12, 2024 05:16 AM GMT
Report

2024 டி 20 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைக் கண்டது வங்காளதேசம்.

சொதப்பல் ஃபார்ம்

முக்கியமான தருணத்தில் அவுட்டாகி வெளியேறிய வங்காளதேசத்தின் நட்சத்திர ஆட்டக்காரர் ஷகிப் அல் ஹாசனை இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் கடுமையாக சாடியுள்ளார்.

Shakib Al hasan

நியூயார்க்கில் நடைபெற்ற போட்டியில், 114 ரன் சேசிங் செய்த போது, ஷகிப் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து அன்ரிச் நார்ட்ஜேவுக்கு எதிராக ஒரு புல் ஷாட்டில் அவுட்டாகினார்.

அய்யயோ துபே இதோட போதும்..இவரை அணியில் சேருங்கள் - வலுக்கும் கோரிக்கைகள்!!

அய்யயோ துபே இதோட போதும்..இவரை அணியில் சேருங்கள் - வலுக்கும் கோரிக்கைகள்!!

இது ஷகிப் retire ஆகா வேண்டிய நேரம் என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் ஷகிப். நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் ஷகிப்'பின் சராசரி 5.50. இரண்டு போட்டிகளில் அவர் 61.11 ஸ்ட்ரைக் ரேட்டில் 11 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

சேவாக் சாடல்

ஷகிப் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சேவாக், கடந்த உலகக் கோப்பையில் அவரது காலம் டி20 வடிவ கிரிக்கெட்டில் முடிந்துவிட்டது என்பதை நான் அறிவேன். ரயில் நடைமேடையை கடந்துவிட்டது. அவரிடம் ஈர்க்கக்கூடிய புள்ளிவிவரங்கள் இல்லை. அவர் ஒரு மூத்த வீரர், மற்றும் முன்னாள் வீரர் - அவரது ஆட்டம் அவரை சங்கடப்படுத்த வேண்டும். ‘டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ என்று அவர் கூற வேண்டும்.

Virender Sehwag interview

நமது அனுபவத்திற்கு ஏற்ப விளையாடவேண்டும். ஷகிப்பின் காலம் வெகு காலத்திற்கு முன்பே முடிந்துவிட்டது. நிர்வாகம் அவரை அணியில் ஷாகிப்'பை அவரின் அனுபவத்திற்காக எடுத்திருந்தால், அது ஆட்டத்தில் வெளிப்படவில்லை. நீங்கள்(shakib) மேத்யூ ஹைடனோ, ஆடம் கில்கிறிஸ்ட்டோ அல்ல. நீங்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர், அதன்படி விளையாடுங்கள் என சாடினார்.