தவான் இனி அவ்வளவுதானா? - கொளுத்திப் போட்ட சேவாக்...!
ஷிகர்தவானுக்கு பதிலாக இந்த இளம் வீரரை களமிறக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் இழந்தது.
இதனிடையே ஷிகர் தவானின் இடத்தை வரும் காலத்தில் சிறப்பாக விளையாடி தேவ்தத் படிக்கல் பூர்த்தி செய்வார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் விளையாடிய படிக்கல் 79 மற்றும் 9 ரன்கள் எடுத்தார். மேலும் உள்ளூர் போட்டிகளிலும் அவரது ஆட்டம் மிக சிறப்பாக இருக்கிறது. மிக இளம் வயதிலேயே இவ்வளவு பெரிய நம்பிக்கையை நம் மீது படிக்கல் சுமத்தியிருக்கிறார் என சேவாக் கூறியுள்ளார்.
You May Like This Video