என்ன நடந்தாலும் டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் - சவால் விடும் பிரபல முன்னாள் வீரர்
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணியே வெல்லும் என முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை(அக்டோபர் 24) நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் இந்த தோல்வி கிரிக்கெட் உலகில் பேசு பொருளாக மாறியுள்ளதால் முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கு தங்களது ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர். மேலும் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்துடன் வரும் 31 ஆம் தேதி மோதவுள்ளதால் அப்போட்டி மிகுந்த எதிர்ப்பார்ப்புக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வரும் முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக், இந்திய அணியே சாம்பியன் பட்டம் வெல்லும் என கணித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, என்னை பொறுத்தவரையில் இந்திய அணி தான் சாம்பியன் பட்டம் வெல்லும் என தற்போதும் நம்புகிறேன். அடுத்தடுத்து வரும் போட்டிகளில் இந்திய வீரர்களின் உண்மையான ஆட்டம் வெளியாகும். இந்த நேரத்தில் தான் நாமும் இந்திய அணியை அதிகமாக ஆதரித்து ஊக்கம் கொடுக்க வேண்டும்.
வெற்றி பெற்றால் இந்திய அணியை கொண்டாடுவதை விட, இந்திய அணி தோல்வியடையும் நேரத்தில் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக இருப்பதே மிக முக்கியம். எனவே தான் இந்திய அணி இந்த தொடரை வெல்லும் என நான் முழுமையாக நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
