“ஆயிரம் சொல்லுங்க தோனியை விட கங்குலிதான் பெஸ்ட்” - உண்மையை போட்டுடைத்த சேவாக்

india ganguly captain sehwag
By Irumporai Sep 15, 2021 07:44 AM GMT
Report

இந்திய அணியின் சிறந்த கேப்டன்கள் தோனியா கங்குலியா என்பது குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மனம் திறந்து பேசியுள்ளார்.

இது குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சேவாக் என்னைப் பொறுத்தவரை இருவருமே சிறந்த கேப்டன்தான். ஆனால் அதில் கங்குலிதான் என்னுடைய பெஸ்ட் எனக் கூறியுள்ளார்.

ஏனென்றால் கங்குலிதான் இக்கட்டான சம்யத்தில் இந்திய அணியினரை மீட்டவர். சிறந்த வீரர்களை அவர் தேர்வு செய்து அறிமுகப்படுத்தினார். ஒரு அணியை உருவாக்கி வெளிநாடு ஆடுகளங்களில் இந்தியாவை வெற்றிப் பெற வைத்தார்.

அது எங்களுக்கு அப்போதைய காலக்கட்டத்தில் மிகவும் உத்வேகமாக இருந்தது. மேலும் நன்றாக உருவாக்கப்பட்ட அணியைதான் தோனி வழிநடத்தினார். அதனால் தோனிக்கு அது சாதகமாக இருந்தது. அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்பு புதிய அணியை உருவாக்குவதில் அவருக்கு எந்த கஷ்டமும் இல்லை.

அதனால்தான் இருவருமே சிறந்த கேப்டன், ஆனால் என்னை பொறுத்தவரை கங்குலிதான் பெஸ்ட்" என சேவாக் கூறியுள்ளார். 1999 ஆம் ஆண்டு காலத்தில் இந்திய அணி சூதாட்ட புகாரில் சிக்கியது.

அப்போது முகமது அசாருதீன் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார். அவர் மீதும் சூதாட்டப் புகார் எழுந்தது. இதனால் இந்திய அணிக்கு புதிய கேப்டன் பொறுப்பை ஏற்றார் கங்குலி. பின்பு 2005 ஆம் ஆண்டில் தோனியை இந்திய அணிக்கு அறிமுகப்படுத்தியதும் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.