இந்தியாவை தோற்கடித்தால்... நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்கிறேன்... பாகிஸ்தான் நடிகை சவால்...!

Pakistan Zimbabwe national cricket team
By Nandhini Nov 04, 2022 07:02 AM GMT
Report

இந்தியாவை தோற்கடித்தால், நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்கிறேன் என்று பாகிஸ்தான் நடிகை ஒருவர் சவால் விட்டுள்ளார்.

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி -

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு 8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி கடந்த 16-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 8-வது டி-20 ஓவர் உலக கோப்பை போட்டியில் மொத்தம் 16 நாடுகள் கலந்து கொண்டுள்ளன.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடி வருகிறது.

தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பாகிஸ்தான்

T20 உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று சிட்னி மைதானத்தில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் (குரூப்2) நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இப்போட்டியின் கடைசியில் 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணி எடுத்து தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி அடைந்தது.

sehar-shinwaris-tweet-zimbabwean-marry

பாகிஸ்தான் நடிகை சவால்

வரும் 6ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) T20 உலகக் கோப்பை போட்டியின் சூப்பர் 12 ஆட்டத்தில் இந்தியா ஜிம்பாப்வேயுடன் மோத உள்ளது. இப்போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இப்போட்டி தொடர்பாக பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி என்பவர் ஒரு டுவிட் செய்துள்ளார். அந்த டுவிட் பக்கத்தில், ஜிம்பாப்வே... இந்தியாவை தோற்கடித்தால், 'ஜிம்பாப்வே பையனை' திருமணம் செய்து கொள்வேன் என்று அதில் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த டுவிட் பதிவு சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஆஹா... என்ன அற்புதமான ஒப்பந்தம்... இன்னும் சிலர்... ஆனால் அவர்கள் உங்களை திருமணம் செய்ய மறுத்தால்?" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.