ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வேட்பாளரை அறிவித்த நாம் தமிழர் - யார் இந்த சீதாலட்சுமி?

Naam tamilar kachchi Seeman Election Erode
By Karthikraja Jan 14, 2025 04:30 AM GMT
Report

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்,கடந்த மாதம் காலமான நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக

திமுக சார்பில் அந்த கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், ஈரோடு கிழக்குத் தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்

அதிமுக, தேமுதிக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனால், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையேயான இருமுனை போட்டியாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மாறியுள்ளது.

மா.கி.சீதாலட்சுமி

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், மா.கி.சீதாலட்சுமி போட்டியிடுவார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் மாரப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர், மா.கி. சீதாலட்சுமி. 

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாம் தமிழர் சீதாலட்சுமி SeethaLakshmi

விவசாயக் குடும்பத்தை பின்னணியாகக் கொண்டவர், முதுகலை பொருளாதாரம் படித்துவிட்டு ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் 13 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். தற்போது, விவசாயம் மற்றும் கேபிள் ஆபரேட்டர் தொழில் செய்துவரும் சீதாலட்சுமி நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார்.

இவர் கடந்த 2016, 2021 ஆகிய சட்டப் பேரவைத் தேர்தல்களிலும், 2019-இல் ஈரோடு மக்களவைத் தொகுதியிலும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தற்போது நாம் தமிழர் சார்பாக 5வது முறையாக களமிறங்குகிறார்.