வாய்ப்புக்காக அப்படி கேட்கத்தான் செய்வாங்க.. அவருக்கும் தெரியும் - சீதா பளீச்!
மீ டூ விவகாரம் குறித்து நடிகை சீதா மனம் திறந்துள்ளார்.
நடிகை சீதா
தமிழ் திரையுலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன்.இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.
1980 களில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த நடிகை சீதா. இவர் ஆண் பாவம்,குரு சிசியன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இதையடுத்து நடிகர் பார்த்திபனுடன் பல படங்களில் நடித்து வந்தார்.1990 ஆம் ஆண்டு நடிகை சீதா வீட்டின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
Me Too
மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில், நடிகை சீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் "மீ டூ ஆரம்பித்தது நல்ல விசயம் தான். அது தனக்காக பேசத் தெரியாத பெண்களுக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது. எனக்கு பிரச்சினை வந்தால் நான் அதை எதிர்கொள்வேன்.
எனக்கு 'மீ டூ' வேண்டாம், சிலபேர் கேட்கத்தான் செய்வார்கள். நீங்க முடியாதுன்னு சொல்லிடலாம்.
சினிமா நடிகரை திருமணம் செய்யும் நடிகைகளுக்கு மட்டும் தான் வாழ்க்கையில் பிரச்சினை என்று இல்லை. சினிமா என்பதால் அவர்களின் பிரச்சினை வெளியே தெரிகிறது. மற்றவர்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. பெண்ணுக்கு வேலை இருந்தால், அவள் பாதி பிரச்சினைகளை கடந்துவிடலாம்” எனத் தெரிவித்துள்ளார்.