சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கம் : அதிர்ச்சியில் கட்சியினர்

Twitter Seeman
By Irumporai Jun 01, 2023 02:29 AM GMT
Report

சீமான் ட்விட்டர் கணக்கு

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்த பலரின் ட்விட்டர் கணக்குகளுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. சட்ட கோரிக்கைக்கு ஏற்ப கணக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்காலிக தடை

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை தவிர நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி மற்றும் 20-க்கும் மேற்பட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் ட்விட்டர் கணக்கு இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

அதாவது, இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளை மீறி டிவிட்டரில் பதிவிடுவதாக வந்த சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று இவர்களது கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.