மமதா பானர்ஜி இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் - சீமான்

Seeman Politics BJP Mamata Banerjee
By mohanelango Apr 16, 2021 10:33 AM GMT
Report

தமிழகத்தோடு சேர்த்து ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் நான்கு மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் மட்டும் மூன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

மேற்கு வங்க தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்திருந்தாலும் பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மேற்கு வங்க தேர்தலில் மமதா பானர்ஜி வெல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்தியுள்ளார்.

இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பாஜகவுக்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையேயான கடுமையான போட்டி எனச் சொல்லப்படும் மேற்கு வங்க தேர்தலில் மத்திய அரசின் ஆதிக்க மனப்பான்மைக்கு எதிராக மமதா பானர்ஜி வெல்ல வேண்டும்.

’நான் ஒற்றைக் காலில் மேற்கு வங்கத்தை வென்றுவிட்டு, இரண்டு கால்களில் வந்து டெல்லியை வெல்வோம்’ மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். ஒரு போராளியிடம் இருந்து மட்டுமே இந்த மாதிரியான கருத்து வர முடியும்

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.