விஜயின் முதல் அரசியல் மாநாடு...சீமான் சொன்ன அந்த பாயிண்ட் - என்ன தெரியுமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிருப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும் எனச் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய், புதிய கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதாம் தொடங்கிய அவர் 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என்று அறிவித்து இருந்தார். இதனையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி பனையூரில் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்தார்.
கட்சியின் மேலே, கீழே சிவப்பு நிறமும் நடுவில் மஞ்சள் நிறமும் அந்தக் கொடியில் அமைந்திருந்தது. நடுவில் வாகை மலரும், அதைச் சுற்றி நட்சத்திரங்களும் வாகை மலர் பக்கவாட்டில் பிளிறும் இரு போர் யானைகளும் அமைந்திருக்கும் படி கொடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த கொடிக்குப் பின்னால் ஒரு சுவாரஸ்ய வரலாறு இருப்பதாகவும் அதைக் கட்சியின் முதல் மாநில மாநாட்டில் சொல்வதாகவும் விஜய் கூறியிருக்கிறார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காகப் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீமான்
அரசியல் வருகைக்குப் பின், முதல் முறையாக மாநாட்டில் உரையாற்றப்போகும் விஜய் என்ன சொல்லப்போகிறார்?, அவரது கட்சியின் கொள்கைகள் என்ன? என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடையே மட்டுமன்றி, தமிழ்நாடு அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) October 26, 2024
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்!
தம்பி… pic.twitter.com/VowJCFImVq
இந்த நிலையில் தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்குச் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அரசியல் மாற்றமெனும் பெருங்கனவோடு ஆருயிர் இளவல் விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தவெக கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பேரறிவிருப்பு தமிழ்நாட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் நலன் பயக்கட்டும்! தம்பி விஜய் அவர்களின் நம்பிக்கையும், நல்நோக்கமும் ஈடேறட்டும்! என்று தெரிவித்துள்ளார்.