இடைத்தேர்தலில் சீமான் போட்டி

Naam tamilar kachchi Seeman
By Fathima Jun 27, 2026 04:15 AM GMT
Report

தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக சீமான் களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து அக்கட்சியில் உள்கட்சி பூசல் வெடித்தது.

சட்டப்பேரவையில் நடந்த தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் அதிமுக எம்எல்ஏ-க்கள் வாக்களித்தால் பரபரப்பானது.

தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ-க்கள் 4 பேர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர்.

இடைத்தேர்தலில் சீமான் போட்டி | Seeman Will Elect In Ambasamudram

தற்போது விஜயபாஸ்கரும் பதவியை ராஜினாமா செய்துள்ளதால் காலியாக உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையை சேர்த்தும் மொத்தம் 6 இடங்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், காலியாக உள்ள 6 தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் நான் போட்டியிட வேண்டும் என்பதே நாதகவினரின் விருப்பம்.

பிற கட்சியினரின் விருப்பமும் இதுவாக இருக்கிறது, அம்பாசமுத்திரம் இதற்கு உகந்ததாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.