‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே...’ பாடலுக்கு உருகி படக்குழுவை பாராட்டிய சீமான்

Naam tamilar kachchi Seeman
By Thahir Oct 08, 2022 04:18 AM GMT
Report

கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் ‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே’ என பாடலில் அப்படியே வடித்திருக்கின்ற கவிஞர் தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு உயிரூட்டியிருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீமான் பாராட்டு 

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற #மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

‘மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே...’ பாடலுக்கு உருகி படக்குழுவை பாராட்டிய சீமான் | Seeman Was Melted For The Song Mallipoo Vachu

அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது.

கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்!உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்!

அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!” என தெரிவித்துள்ளார்.