சீமானின் ட்வீட்டர் கணக்கு முடக்கம் - விளக்கம் கொடுத்த தமிழ்நாடு காவல்துறை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்ட நிலையில் சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
முதலமைச்சர் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கு நேற்று திடீரென முடக்கப்பட்டது. இதற்கு காரணம் சென்னை காவல்துறை தான் காரணம் என்று தகவல்கள் பரவின.
இதனிடையே சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கை உடனே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம்.கழுத்தை நெரிப்பது அல்ல.
ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் செல்ல சமூக வலைத்தளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திரு. திருமுருகன் காந்தி உள்ளிட்டோரது ட்விட்டர் கணக்குகள் இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.
— M.K.Stalin (@mkstalin) June 1, 2023
கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெரிப்பது அல்ல.…
தமிழ்நாடு காவல்துறை விளக்கம்
இந்தநிலையில், சீமான் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சீமான், திருமுருகன் காந்தி ஆகியோரின் ட்விட்டர் கணக்கை முடக்க எந்தவித பரிந்துரையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது.