இதுதான்டா தமிழ்நாடு: வைரலாகும் ஒற்றை புகைப்படம்
திருச்சி விமான நிலையத்தில் அரசியல் கட்சித் தலைவர்களான திருச்சி சிவா, தமிழிசை சௌந்தரராஜன், தொல்.திருமாவளவன், சீமான் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
திமுக- காங்கிரஸ் கூட்டணி, NDA கூட்டணி, தவெக, நாதக என நான்குமுனை போட்டி நிலவலாம் என பேசப்படுகிறது.
இந்நிலையில் பணி நிமித்தமாக திருச்சி விமான நிலையம் சென்ற அரசியல் தலைவர்கள் எடுத்துக்கொண்ட ஒற்றை செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது.

நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் திமுக எம்பி திருச்சி சிவா ஆகியோர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர்.
இவர்கள் அனைவரும் செல்பி எடுத்துக்கொண்டுள்ளனர், இந்த படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்த தொல்.திருமாவளவன், முறுவலிக்கும் முரண்கள் என தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
இந்த படம் வைரலாக இதுதான் தமிழ்நாடு, கொள்கை கோட்பாடுகளால் 4 தலைவர்களும் வேறுபட்டு நின்றாலும் அவர்களின் புன்னகையும், அன்பும் தான் தமிழ்நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது என பல கமெண்டுகள் குவிந்து வருகின்றன.
சற்று முன் திருச்சி விமான நிலையத்தில்..
— Thol. Thirumavalavan (@thirumaofficial) February 18, 2026
'முறுவலிக்கும் முரண்கள்' .
அண்ணன் திருச்சி சிவா எடுத்த 'செல்ஃபி'. pic.twitter.com/rm0kQinPUG