234 தொகுதி வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் சீமான்
2026 சட்டமன்ற தேர்தலை நாம் தமிழர் கட்சி தனித்து எதிர்கொள்ளும் என்று ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதற்காக “மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு” என்ற மாநில மாநாடு திருச்சி–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெறுகிறது.
சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் திடல் அமைக்கப்படும் இந்த மாநாட்டில் சீமான் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
மேலும் 2026 தேர்தலில் போட்டியிடும் 234 தொகுதி வேட்பாளர்களையும் சீமான் அறிமுகம் செய்கிறார்.
இதில் 117 ஆண் வேட்பாளர்கள், 117 பெண் வேட்பாளர்கள் மற்றும் சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் ஒரு திருநங்கை வேட்பாளரும் இடம்பெறுகிறார்.
மாநாடு பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணிக்கு முடிவடைகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கான கால் கோள்விழா இன்று நடைபெற்றது.
இதில் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் கலந்து கொண்டு மாநாட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
