The Family Man 2 தொடரை நிறுத்தாவிடில் அவ்வளவு தான்.. அமேசானுக்கு சீமான் எச்சரிக்கை!
அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ள The Family Man 2 தொடர் கடும் சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது.
The Family Man 2 தொடரில் இலங்கையில் நடைபெற்ற தமிழர்களின் விடுதலை போராட்டம் தவறாக சித்தரிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
The Family Man 2 தொடரை ஒளிபரப்பக்கூடாது என தமிழ்நாடு அரசு உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்திருந்தன.
ஆனால் எதிர்ப்புகளையும் மீறி The Family Man 2 தொடர் வெளியாகியுள்ளது. இந்நிலையில் The Family Man 2 தொடரின் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தின் சேவைகளை உலகத் தமிழர்கள் புறக்கணிப்பார்கள் என சீமான் எச்சரித்துள்ளார்.
#FamilyMan2_against_Tamils
— நாம் தமிழர் கட்சி (@NaamTamilarOrg) June 6, 2021
தமிழர்களுக்கெதிரான, #FamilyMan2 இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்தாவிடில் @PrimeVideoIN உள்ளிட்ட @amazon நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான்https://t.co/UMsRpwD2jx#BoycottAmazon pic.twitter.com/QS7fAdfrkI
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈழ தமிழர்களின் போராட்டத்தை இழிவுபடுத்தும் நோக்கில் வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள The Family Man 2 தொடர் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி வெளியாகியுள்ளது.
இதன் ஒளிபரப்பை அமேசான் நிறுவனம் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் உலகத் தமிழர்கள் அமேசான் நிறுவனத்தின் சேவைகளை புறக்கணிப்பார்கள்” என்றுள்ளார்.