சீமான் வருமானம் ஆயிரம் ரூபாய் தானா? சர்ச்சைக்கு சீமான் சொன்ன பதில் என்ன.?

thousand seeman ntk rupee
By Jon Mar 17, 2021 01:47 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சட்டமன்ற தேர்தலில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை சமீபத்தில் தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கல் செய்யும்போது சொத்து மதிப்பு, குற்றப்பின்னணி, நிலுவையில் உள்ள கடன் விவரங்கள், தண்டனை பெற்ற விவரங்கள் உள்ளடக்கிய பிரமாண பத்திரத்தையும் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து வழக்கம்.

அவ்வாறு சீமானும் தன்னுடைய சொத்து மதிப்பு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தார். அதில் 2019 - 20ம் நிதியாண்டில் மொத்த வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய அசையும் சொத்தின் மதிப்பு ரூ.31,06,500, அசையா சொத்து ஏதுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

அவருடைய மனைவிக்கு ரூ.63,25,031 மதிப்பு அசையும் சொத்து உள்ளதாகவும், ரூ.25,30,000 மதிப்பு அசையா சொத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.2019- 20 ம் நிதியாண்டில், வருமான வரிக்கணக்கில் காட்டப்பட்ட மொத்த வருமானம் ஆயிரம் ரூபாய் மட்டும் என குறிப்பிடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சமூக ஊடகங்களில் பலரும் இது தொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து சீமான் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். பிரமாண பத்திரத்தில் ஆயிரம் ரூபாய் வருமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது எழுத்து பிழை என சீமான் தெரிவித்துள்ளார்.