தமிழர்களை அடிக்கும் போது என்ன செய்தீர்கள் - பிரசாந்த் கிஷோரை பாராட்டிய சீமான்..!

Naam tamilar kachchi Tamil nadu Seeman Prashant Kishor Bihar
By Thahir Mar 14, 2023 01:57 PM GMT
Report

பிரசாந்த் கிஷோர் பீகார் மக்களுக்கு உண்மையாக இருக்கீங்க நான் தமிழர்களுக்கு உண்மையாக இருக்கிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரசாந்த் கிஷோர் 

தமிழ்நாட்டில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் உண்மையானவை இவற்றை புறக்கணிக்க கூடாது. போலி வீடியோக்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் விரைவில் உண்மையான வீடியோவை வெளியிடுவேன் என்று கூறியிருந்தார் பிரசாந்த் கிஷோர். இதை தொடர்ந்து அவர் சீமான் பேசிய வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். 

இந்திக்கார பய எல்லாம் தெறிச்சு ஓட போறான். நான் ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் அவன் எல்லாம் பெட்டியை கட்டிக்கொண்டு போய்விடுவான். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரே வாரத்தில் எல்லாரையும் வீட்டிற்கு அனுப்பிவிடுவேன். கஞ்சா வச்சு இருக்கான்.. கேஸ் போடு.. அபின் வச்சு இருக்கான் கேஸ் போடு.. பலாத்காரம் பண்ணிட்டான் கேஸ் போடு என்று ஜெயிலில் போடுவேன். எத்தனை பேரை எங்கே வைத்து வெளுப்பேன் என்று தெரியாது. ஒரு ஆயிரம் பேரை தூக்கி உள்ளே போடுவேன். அவனுக்கு சோறு போட மாட்டேன். அவர்களை விட மாட்டேன். எல்லாம் தெறிச்சு ஓட போகிறான் என்று கூறியிருந்தார்.

முதலமைச்சருக்கு நன்றி 

பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெறுப்பு மற்றும் வன்முறையைத் துாண்டும் வகையில் போலியான வீடியோக்களை பயன்படுத்திய அனைவரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் இந்தி பேசும் மக்களுக்கு எதிராக வன்முறைக்கு வெளிப்படையாக அழைப்பு விடுப்பவர்களை இது விடுவிக்காது. சீமான் போன்றவர்கள் மீது ஏன் நடவடிக்கை இல்லை? தங்களின் விறுவிறுப்பான பேச்சுகளுக்காகவா? என கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து சீமான் மீது தேசிய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவித்தல், வன்முறையை துாண்டும் வகையில் பேசுதல், மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஈரோடு கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு பிரஷாந்த் கிஷோர் உடனடியாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

வாழ்வாதாரத்தை இழந்து எங்கே போவது?

இந்த நிலையில், கடலுார் மாவட்டம் நெய்வேலியில் நிலக்கரி நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக விளைநிலங்களை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழர்களை அடிக்கும் போது என்ன செய்தீர்கள் - பிரசாந்த் கிஷோரை பாராட்டிய சீமான்..! | Seeman Thanks Prashant Kishore

இதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், விளை நிலங்களை கையகப்படுத்த துடிப்பதாகவும், நிலம் என்பது வெறும் மண் அல்ல நம் தாயின் மடி என்றார்.

நம்மை சொந்த நாட்டிற்குள்ளே அகதிகளாக நகர்த்துவதை பாருங்கள். எங்கள் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்து எங்கே போவது?

வட இந்தியர்கள் அதிகமாக வருகிறார்கள் அதை முறைப்படுத்துங்கள் என்று தான் பேசினோம். பிரசாந்த் கிஷோர் நான் உங்களை பாராட்டுகிறேன்..நீங்கள் பீகாரி, பீகாரிக்கு உண்மையாக இருக்குறீர்கள். நான் தமிழன் அதுபோல என் இனத்திற்கு உண்மையாக இருக்கிறேன்.

பிரசாந்த் கிஷோருக்கு நன்றி சொன்ன சீமான் 

கர்நாடக,கேரளாவில் இருக்கும் தமிழர்களை அடித்தால் என்ன பண்ணுவது என மிரட்டுவார்கள். என் அச்சுறுத்தாதே என்னை தொட்டா நானும் தொடுவேன். மிரட்டலுக்கு பணியும் நபர் நான் இல்லை என்றார்.

மீன் பிடிக்க சென்ற தமிழர்களை சிங்கள கடற்படை பிடித்து சிறையில் போட்டத்தை யாரும் பாவம் பார்க்கவில்லை. அது என்ன நான் அடி வாங்கும் போது நன்முறையா இருக்கு மற்றவர்கள் அடிவாங்கினால் வன்முறையா இருக்கு எப்படி என கேள்வி எழுப்பினார்.

தமிழர்களை அடிக்கும் போது என்ன செய்தீர்கள் - பிரசாந்த் கிஷோரை பாராட்டிய சீமான்..! | Seeman Thanks Prashant Kishore

400 கோடி ரூபாய் வாங்கிட்டு திமுகவிற்கு வேலை செய்த பிரசாந்த் கிஷோர் எனக்கு 4 ரூபாய் கூட வாங்காமல் வேலை செய்து இப்படி ஒருத்தன் இருக்கானா என இந்தியா முழுவதும் தெரிய வைத்துவிட்டார். அதற்கே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றார்.