விஜய் பெரிய ஹீரோன்னா தனித்து நிற்க வேண்டும் - சீமான் ஆவேசம்!

Vijay Tamil nadu Seeman Election
By Vinoja Apr 02, 2026 05:36 AM GMT
Report

பெரிய ஹீரோன்னா தனித்து நிற்க வேண்டும். ஒரே தொகுதியில கான்பிடன்டா நற்க வேண்டும் என விஜய் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காளப்பட்டி பகுதியில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபடும் போதே இவ்வாறு தவெக தலைவர் விஜய் தொடர்பில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

விஜய் பெரிய ஹீரோன்னா தனித்து நிற்க வேண்டும் - சீமான் ஆவேசம்! | Seeman Talk About Tvk Leader Vijay

அதன் போது இவர் மேலும் குறிப்பிடுகையில், தன்னையும் மக்களையும் நம்பாதவன் தான் 2 தொகுதிகளில் போட்டியிடுவான். நான் மாஸு.., நான் பிளாஸ்ட்.., நான் உச்சம்னு.., வசனம் பேசுனா மட்டும் போதுமா?. பெரிய ஹீரோன்னா தனித்து நிற்க வேண்டும்.

ஒரே தொகுதியில கான்பிடன்டா நிக்கணும். நம்ம வெல்லுவோம். நம்பிக்கையோட இருங்கள் என்று சொல்லிவிட்டு, உனக்கே நம்பிக்கை இல்ல. எதுக்கு இரண்டு தொகுதிகளில் போய் நிற்க வேண்டும்.

இரண்டு முறை நின்று நான் தோற்று போயுள்ளேன். ஆனாலும் மூன்றாவது முறையாக தனித்து போட்டி போடுகிறேன். கட்சியில் இரண்டு தொகுதியில் நிற்க சொன்னார்கள். ஆனால் எனது கோட்பாடுபடி, ஒருவன் ஒரு பதவியில் இருந்து இன்னொரு பதவிக்கு போட்டி போடுவது ஜனநாயக துரோகம்.மக்கள் விரோதம்.

விஜய் பெரிய ஹீரோன்னா தனித்து நிற்க வேண்டும் - சீமான் ஆவேசம்! | Seeman Talk About Tvk Leader Vijay

ஒருவன் ஒரே நேரத்தில் இரண்டு தொகுதியில் போட்டி போடுவது மக்கள் விரோதம். இது எங்கள் கொள்கை. வரலாற்றில் எங்கள் அளவுக்கு யாரும் தோற்க முடியாத அளவுக்கு தோல்வி அடைந்தோம்.

யார்கிட்ட? என் ஆத்தா கிட்ட, என் அப்பா கிட்ட, என் மாமா கிட்ட, என் மச்சின கிட்ட. பெருமையாக இருக்கு தோல்வி அடைய. இன்னைக்கு வீழ்த்துவான், அடிப்பான், திட்டுவான்.

ஆனால், ஒருநாள் இந்த பிள்ளைகள் கொண்டாடும் காலமும் வரும் என சீமான் குறிப்பிட்டுள்ளார்.