பலமுறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியிடம் தொடர்பில் இருந்த சீமான் - வெளியான அதிர்ச்சி தகவல்!
நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமான் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.
நடிகை விஜயலட்சுமி
நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஏமாற்றிவிட்டதாகக் கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக 2011-ல் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.பின்னர் நடிகை விஜயலட்சுமி தான் அளித்த பாலியல் புகாரைத் திரும்பப்பெறுவதாக 2012ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்தார். அதனடிப்படையில் காவல் துறையினர் வழக்கை முடித்து வைத்தனர்.
இந்த நிலையில் சீமான் மனுமீதான விசாரணை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 2008 ஆம் ஆண்டு முதல், பல முறை கட்டாயப்படுத்தி விஜயலட்சுமியிடம் சீமான் தொடர்பு வைத்திருந்ததாகவும்,திருமணம் செய்துகொள்வதாகச் சீமான் தந்த வாக்குறுதியை நம்பியே,
சம்மன்
2 முறை அவருக்கு எதிரான புகாரை விஜயலட்சுமி வாபஸ் பெற்றதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் 12 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு சீமான் தாக்கல் செய்திருந்த மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், வரும் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 12 வாரங்கள் என உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ள நிலையில், இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.