முதலமைச்சருக்கு நன்றி : புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய சீமான்

M K Stalin DMK Seeman
By Irumporai Jun 01, 2023 10:49 AM GMT
Report

தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என சீமானின் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.  

ட்விட்டர் கணக்கு முடக்கம்

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானின் (@SeemanOfficial) என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டது.

முடக்கப்பட்ட அந்த பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்திருக்கிறதது. சீமான் கணக்குகள் மட்டுமில்லாமல், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலரது ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டடுள்ளது. 

முதலமைச்சருக்கு நன்றி : புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கிய சீமான் | Seeman Started A New Twitter Account

முதலமைச்சருக்கு நன்றி

இதற்கு முதலமைச்சர் முக ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் புதிய ட்விட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்,அதில் அதில், புதிய நாடாளுமன்றத்தை செங்கோல் நாட்டி திறந்து வைத்துவிட்டு, ஆட்சியின் கொடுமைகளை எதிர்த்து எழுதும் எழுதுகோல்களை முறித்து, குரல் வளையை நெறிக்கும் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசின் கொடுங்கொன்மைச் செயல் வெட்கக்கேடானதாகும்.

கருத்தினைக் கருத்தால் எதிர்கொள்ளத் திராணியற்று, எங்களது கீச்சகத்தை முடக்கி கருத்துச்சுதந்திரத்தை ஒடுக்கும் அடக்குமுறையைக் கண்டித்து தனது வலிமையானக் கருத்தைப் பதிவுசெய்து, துணை நிற்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலினுக்கு நன்றி என கூறியுள்ளார்.