கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சாத்தானின் பிள்ளைகள், நாட்டை தெருவில் விட்டவர்கள் - கொந்தளித்த சீமான்!

Tamil nadu Seeman
By Vinothini Jul 31, 2023 04:49 AM GMT
Report

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவர்கள், மற்றும் முஸ்லீம்கள் குறித்து காட்டமாக பேசியுள்ளார்.

சீமான் பேட்டி

மணிப்பூரில் குகி பழங்குடியின மக்களுக்கு எதிரான அநீதியை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு உரையாற்றினார்.

seeman-spokes-about-muslims-and-christians

அதில் பேசிய அவர், "இலங்கை நம் தமிழின மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும், பெண்களுக்கு எதிரான அக்கிரமங்களையும் கண்கூடாக பார்த்தோம். எந்த கொடுமைகள் என்றால் என்ன என்று நமக்கு தெரியும். எனவே எங்கோ ஒரு மூளையில் உள்ள மணிப்பூருக்காக பேசுகிறோம். அதனால் நமக்கு எந்த லாபமும் இல்லை" என்று பேசினார்.

காட்டம்

இதனை தொடர்ந்து, அவர் கூறுகையில், "மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று.

seeman-spokes-about-muslims-and-christians

அது சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது. சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியதே இஸ்லாமியர்களும், கிறிஸ்துவ மக்கள்தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகள் 18 விழுக்காடு வாக்குகளை திமுகவுக்கும் காங்கிரஸுக்கு போட்டு போட்டு இந்த நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள்தான்" என்று கடுமையாக பேசியுள்ளார்.