இந்த 1000 ரூபாய் பெறுவதற்கு பிச்சைக்காரியா இருக்கனுமா? சீமான் கேள்வி

Seeman
By Jiyath Jul 08, 2023 06:24 PM GMT
Report

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் விதிமுறைகள் குறித்தது சீமான் பேசியுள்ளார்.

மகளிர் உரிமைத்தொகை திட்டம்

தமிழக முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுதான் மகளிர் உரிமைத்தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக 7000 கோடி ரூபாயை நடப்பு பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன் ஒரு கோடி மகளிருக்கு இந்த உரிமை தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது.

இந்த 1000 ரூபாய் பெறுவதற்கு பிச்சைக்காரியா இருக்கனுமா? சீமான் கேள்வி | Seeman Speech Today Pdk 00

அதில் யாருக்கெல்லாம் இந்த தொகை கிடையாது என்பதற்கு தமிழக அரசு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில் 5 ஏக்கர் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 இல்லை, வருமான வரி செலுத்துவோர் மற்றும் தொழில்வரி செலுத்துவோர், சொந்தமாக கார் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் உள்ளவர்கள், பெண் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், பெண் அரசு ஊழியர்கள் போன்ற விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.

நாங்கள் பிச்சைக்காரியா இருக்கணுமா?

இந்நிலையில் இந்த விதிமுறைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கேள்வி எழுப்பியபோது "நாங்கள் பிச்சைக்காரியா இருக்கனும் அவ்வளவுதானே? இதெல்லாம் இருந்தால் நாங்கள் எதற்கு உங்களிடம் 1000 ரூபாய் கேக்க வேண்டும்? மக்களோ, கல்லூரியில் படிக்கும் மாணவிகளோ யாரும் உங்களிடம் இந்த ஆயிரம் ரூபாய் கேட்கவில்லை. நிலம் இருக்கக்கூடாதது, வருமானம் இருக்கக்கூடாது என்று சொல்லி மக்களை அவமானப்படுத்தாமல் விட்டிருக்கலாம் என்று சீமான் பேட்டியளித்துள்ளார்.