ஆளுநர் எப்படி ஐ.பி.எஸ் பாஸ் பண்ணாருன்னு தெரியல - சீமான் காட்டம்!

Tamil nadu R. N. Ravi Seeman
By Vinothini Jun 11, 2023 05:17 PM GMT
Report

திருச்சியில் சீமான் தமிழக ஆளுநர் குறித்து பேசி பேட்டி அளித்துள்ளார்.

சீமான்

திருவெறும்பூரில் பல நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமானத்தில் திருச்சி வந்து இறங்கினார். அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியுள்ளார், அதில் அவர் திமுக மற்றும் பாஜக குறித்து கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

seeman-speaks-about-rn-ravi

தொடர்ந்து அவர் பேசுகையில், " இந்த 9 ஆண்டுகளில் பாஜக எந்த சாதனைகளும் செய்யவில்லை. அதானியை வளர்த்து விட்டதை தவிர வேறு என்ன செய்தார்கள். எல்லா அரசு சொத்துக்களையும் தனியாருக்கு தாரை வார்த்து கொடுத்தது" என்று கூறினார்.

ஆளுநர் குறித்து

இதனை தொடர்ந்து, தமிழக ஆளுநர் குறித்த கேள்விக்கு, அவர் கூறுகையில், "அவரெல்லாம் எப்படி ஐ.பி.எஸ் பாஸ் பண்ணாருன்னு இன்னும் எனக்கு சந்தேகமாவே இருக்கு. ஒரு அடிப்படை இதுவும் இல்ல, வரலாறும் தெரியல, என்னத்தையாவது ஒன்னு பேசுறாரு" என்று கூறியுள்ளார்.

seeman-speaks-about-rn-ravi

தொடர்ந்து அவர், " ராணுவ வீரரின் புகார் குறித்து மிகவும் வேதனை அளிக்கிறது. நாட்டின் எல்லையை காக்கும் வீரனுக்கு தனது வீட்டை காக்க முடியவில்லை. இப்படி இருந்தால் எப்படி அடுத்த தலைமுறை ராணுவத்திற்கு வருவங்க.

ஆளுநர் எங்க இதெல்லாம் கவனிக்க போறார், அவருக்கு இது வேலை இல்ல, அவருக்கு கொடுத்த வேலைய பாத்துட்டு இருப்பார்" என்று காட்டமாக பேசியுள்ளார்.