ஜெய் பீமில் சர்ச்சைக்குரிய காட்சி! கருத்து தெரிவித்துள்ள சீமான்
ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் அவமதித்ததாக கடும் சர்ச்சை எழுந்தது, இதனையடுத்து அக்னி குண்ட காலண்டர் தொடர்பான காட்சிகள் சரிசெய்யப்பட்டது.
மேலும் வில்லனாக நடித்திருந்த நபரின் பெயர் குரு மூர்த்தி என பெயரிடப்பட்டிருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முக்கிய பிரபலங்கள் மற்றும் திரைத்துறையினர் சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான், ஜெய்பீம் திரைப்படத்தில் அக்னிகுண்ட காலண்டரை காண்பித்தது தவறு; அந்த காட்சியை தவிர்த்திருக்கலாம், அந்த காட்சியை பார்க்கத் தவறிவிட்டேன், இல்லையெனில் நானே சூர்யாவிடம் நேரடியாக அந்த காட்சியை நீக்க சொல்லி பேசியிருப்பேன் என தெரிவித்துள்ளார்.