ஓட்டுப் பெட்டியையும் பனையூரில் வைக்க சொல்வாரா? விஜய் மீது சீமான் கடும் விமர்சனம்
விஜய் ஓட்டுப் பெட்டியையும் பனையூரில் வைக்க சொல்வாரா என சீமான் விமர்சித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சந்திக்கும் விஜய்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் நேரில் சந்திக்காதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நாளை சென்னை, மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வைத்து விஜய் சந்திக்க உள்ளார்.
விஜய் கரூர் செல்லாமல், அவர்களை சென்னைக்கு வரவழைத்து ஆறுதல் கூற உள்ளதையும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
நாம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், இந்த விடயத்தில் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

நாம் தமிழர் கட்சி சார்பில், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் புகழுரை பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
சீமான் விமர்சனம்
இதில் பேசிய சீமான், கூட்ட நெரிசலில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினரை பனையூருக்கு விஜய் வரச் சொல்கிறார். எல்லா ஓட்டுப் பெட்டியும் பனையூரில் வை எனச் சொல்வார்களா? பண்ணையார்கூட பஞ்சாயத்துக்கு வருகிறார். என் வீட்டில் தான் பஞ்சாயத்து என பனையூர்க்காரர் பஞ்சாயத்துக்குக்கூட வர மறுக்கிறார்.

விஜயை நோக்கி சில கேள்விகளை தான் கேட்டேன் உடனே அவரை எதிர்க்கிறேன் என சொல்லிவிட்டார்கள். அவர்கள் அவ்வளவு பெரிய ஆள் எல்லாம் இல்லை.
என் நண்பனாக இருக்க எந்தத் தகுதியும் தேவையில்லை; ஆனால் எதிரியாக இருக்க தகுதி வேண்டும். என மீது தற்போது 200க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தேர்தலுக்கு முன்னர் 300 அடித்து விடலாம். வழக்கு இல்லையென்றால் விடியாது கிழக்கு" என பேசியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |