அணில் ஜங்கிள்னு கத்தாம ஏன் அங்கிள் னு கத்துது? விஜய்யை சீண்டிய சீமா

Vijay Tamil nadu Seeman
By Sumathi Aug 27, 2025 11:31 AM GMT
Report

அணில் என மீண்டும் விஜய்யை சீமான் விமர்சித்துள்ளார்.

விஜய் பேச்சு

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் மதுரை மாநாடு பேச்சு குறித்து கருத்து கூறியுள்ள நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்,

அணில் ஜங்கிள்னு கத்தாம ஏன் அங்கிள் னு கத்துது? விஜய்யை சீண்டிய சீமா | Seeman Slams Vijay Call Stalin As Uncle

“கடந்த விக்கிரவாண்டி மாநாட்டில் முதலமைச்சர் சாராக இருந்தவர் இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக மாறினார். அணில் 'ஜங்கிள் ஜங்கிள்' என்று தான கத்த வேண்டும் ஏன் 'அங்கிள் அங்கிள்' என கத்துகிறது. விஜய்யின் பாதுகாப்புக்கு இவ்வளவு பவுன்சர்கள் எதற்கு?

நாளை மக்களை எப்படி சந்திப்பீர்கள்? இபிஎஸ் முதலமைச்சராக இருந்த நான்கரை ஆண்டுகளில் அதிமுக யாரிடம் இருந்தது என விஜய் கேட்காதது ஏன்? அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் விஜய், இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூறுகிறார்.

இதை மட்டும் செய்தால் விஜய் காலி பெருங்காய டப்பாகிவிடுவார் - சேகர்பாபு தாக்கு!

இதை மட்டும் செய்தால் விஜய் காலி பெருங்காய டப்பாகிவிடுவார் - சேகர்பாபு தாக்கு!

சீமான் விமர்சனம்

2016 தேர்தலிலேயே அம்மா ஜெயலலிதா என்னை கூட்டணிக்கு கூப்பிட்டார். நான் வரமாட்டேன் என்று சொன்னேன். நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு நிமிடத்தில் ஊழலை ஒழிப்பேன். சட்டமன்றம் சென்று வெறுமனே மேஜையை தட்டுவதற்கு பதில் வீட்டில் சாணியை தட்டிவிட்டு போய்விடலாம்.

த.வெ.க. மாநாட்டில் 10 லட்சம் பேர் கூடினார்களா..? திருச்சியில் பிப்ரவரி 7ஆம் தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெறவுள்ளது. யாரு கூட்டம் பெருசா இருக்குனு பார்த்துடலாம்.

பாஜக அலுவலகத்தில் இந்து - இஸ்லாமிய இணையருக்கு திருமணம் செய்துவைப்பார்களா? மார்க்ஸிஸ்ட் அலுவலகத்தில் தாழ்த்தபப்ட்ட ஆணுக்கும் உயர்சாதி பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பார்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.