பாஜக உடன் கூட்டணி வைத்து MLA ஆனது திருமாவளவான? நானா? - சீமான் கேள்வி
பாஜக உடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினர் ஆனது திருமாவளவான? நானா?என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயகாந்த் நினைவு நாள்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது.

அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர், ரசிகர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பாஜக உடன் கூட்டணி
சீமானிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர், "நீங்கள் தொடர்ந்து அண்ணன் அண்ணன் என திருமாவை கூறி வருகிறீர்கள். ஆனால் அவர் தொடர்ச்சியாக சீமான் முழு ஆர்.எஸ்.எஸ் ஆக மாறிவிட்டார் என பேசி வருகிறார்" என கூறினார்.
இதற்கு பதிலளித்த சீமான், "பாஜக உடன் கூட்டணி வைத்து மங்களூரில் சட்டமன்ற உறுப்பினர் ஆனது நானா எங்க அண்ணனா? வாஜ்பாய்க்கு வீரவணக்கம். அவர் என்ன போரிலா மாண்டார்? அவருக்கு வணக்கம் செலுத்துவது நாகரிகம் என சொல்கிறார்.

நான் ஒரு மேடையில் ஏறி பாட்டன் பாதையை பேசியது அரசியல் அநாகரிகம் ஆகிவிடுகிறதா? நான் என் அண்ணன் என்ன பேசினாலும் அவரது கருத்தை மதித்து அமைதியாக போகிறேன். ஏனென்றால் மோதலை எனக்கும் என் அண்ணனுக்குமானதாக மாற்றிவிட்டு திராவிடன் மஞ்சள் குளிப்பான்.
சண்டை நாங்க அண்ணன் தம்பிகளிடையே போட வரவில்லை. எனக்கு எதிரி என்ன விடுதலை சிறுத்தைகளா? நான் எங்க அண்ணனை எதிர்க்கவா கட்சி ஆரம்பித்துள்ளேன்? நான் எங்க அண்ணனை, வைகோவை, ஐயா ராமதாஸை எதிர்க்கவா கட்சி ஆரம்பித்திருக்கேன்?
திராவிடர் தமிழர் போர் நடக்கிறது. எங்கள் அண்ணன் பேசாததை நான் ஏதாவது பேசிவிட்டேன் என்றால் சொல்லுங்கள். அறிஞர் அண்ணாவும், கலைஞரும் பெரியாரை எதிர்த்து பேசியதை விடவா நான் அதிகமாக பேசினேன் என கூற சொல்லுங்கள் நான் நிறுத்தி விடுகிறேன்.
என் மொழியை ஏன் சனியன் என சொன்ன, நெஞ்சை அல்லும் சிலப்பதிகாரம் என பாரதி பாடுகிறார், நீ அதை வேசி கதை என சொல்ற வெறி ஏருமா ஏறாதா?" என பேசியுள்ளார்.