தமிழக வாக்காளர்களாகும் வடமாநிலத்தவர்கள்; பேராபத்தை உண்டாக்கும் - சீமான் கொந்தளிப்பு!

Seeman Election
By Sumathi Aug 02, 2025 05:35 AM GMT
Report

வாக்காளர் சிறப்புத் திருத்ததை அனுமதிக்க முடியாது என சீமான் தெரிவித்துள்ளார்.

வாக்காளர் சிறப்புத் திருத்தம்

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 'வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரிலான புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

bihar

"இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் அவசரமாக வாக்காளர்களை நீக்குவதும், புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதும் மக்களாட்சி முறைமையைக் கேலிக்கூத்தாக்கும் செயல். பா.ஜ.க அரசின் கைப்பாவையாகச் செயல்படும் தேர்தல் ஆணையம்,

பா.ஜ.க-விற்கு வாக்களிப்பவர்களை மட்டும் பட்டியலில் சேர்ப்பதுடன், வாக்களிக்காதவர்களை நீக்கும் வகையில் செயல்படுகிறது. இந்த 'வாக்காளர் சிறப்புத் திருத்தம்' தேர்தல் நடைமுறையையே ஒரு வெற்று சடங்காக மாற்றும் எதேச்சதிகாரப் போக்கு. சமீபத்தில் பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியின் முடிவில்,

அம்மாநிலத்தை விட்டு வெளியேறிய 36 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கியுள்ள தேர்தல் ஆணையம், அவர்கள் குடியேறியுள்ள மாநிலங்களில் வாக்குரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் குடியேறியுள்ள 7 லட்சம் பீகார் மக்கள் விரைவில் தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாறக்கூடும்.

நான் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது; பொறுத்திருந்து பாருங்க - அடித்துசொன்ன சீமான்!

நான் இருக்கும் வரை அது நடக்கவே நடக்காது; பொறுத்திருந்து பாருங்க - அடித்துசொன்ன சீமான்!

சீமான் கண்டனம்

மேலும், இந்த புதிய திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 2 கோடி வடமாநிலத்தவர்களும் எளிதாக வாக்காளர் உரிமை பெற வாய்ப்புள்ளது. இது தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழர்களின் அரசியல் அதிகாரத்தைப் பறித்துவிடும்.

seeman

இந்திய நாடாளுமன்றத்தில் தமிழர்கள் சிறுபான்மையாக இருப்பது போல, எதிர்காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இதே நிலை ஏற்படும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியக் கட்சிகளின் ஆட்சிக்கு எதிராக இருந்த தமிழர்களின் வாக்குரிமை பெரும்பான்மை, இந்த நடவடிக்கையால் முற்றிலுமாகப் பறிபோகும் பேராபத்து ஏற்படும்.

பல ஆண்டுகளாக தான் வலியுறுத்தி வரும் 'வடமாநிலத்தவர் வருகையை முறைப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை தற்போது அவசரத் தேவையாக மாறியுள்ளது. தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பணி உரிமையைப் பறிக்கும் வடமாநிலத் தொழிலாளர்கள் வருகையை எதிர்த்துப் போராடியபோது,

அதற்கு எதிராகப் பேசியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆதார் அட்டை, குடும்ப அட்டை போல வாக்காளர் அட்டை வழங்குவது தமிழ்நாட்டின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் உரிமைச் சாசனமாகும். அதை இழப்பது என்பது தமிழர்கள் தங்கள் இறையாண்மையையே இழப்பதற்குச் சமம்.

இந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழ்நாட்டில், இந்திக்காரர்களைத் திணிக்கும் பா.ஜ.க-வின் சூழ்ச்சியை உணர்ந்து, 'உள் நுழைவுச்சீட்டு முறையை' (Inner-Line Permit) உடனடியாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே இந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்க ஒரே வழி.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை, மொழிவாரி மாநிலங்களின் அரசியலமைப்பு வரையறைக்கு எதிரானது. இது பல்வேறு தேசிய இனங்களிடையே அதிகாரப் பகைமையை உருவாக்கி நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும். இறுதியாக, 'வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரில் வடமாநிலத்தவரைத் தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமைப் பறிப்பை

இந்திய ஒன்றிய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையென்றால், தமிழர் அரசதிகார உரிமையைக் காக்க நாம் தமிழர் கட்சி மாபெரும் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.