ஐயா வைகுண்டரை இழிவுப்படுத்திய திமுக; பொதுமன்னிப்பு கேட்கனும் - சீமான்

DMK Seeman Education
By Sumathi Sep 03, 2025 03:57 PM GMT
Report

ஐயா வைகுண்டரை இழிவுப்படுத்திய திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார்.

ஐயா வைகுண்டர்

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான போட்டித் தேர்வில்,

seeman

ஐயா வைகுண்டர் குறித்த கேள்வியில் 'முடிசூடும் பெருமாள்' என்பதை ‘The god of hair cutting' என்று ஆங்கிலத்தில் மிகத்தவறாக மொழிபெயர்த்து இழிவுபடுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது.

திமுக அரசு தொடர்ச்சியாகப் போற்றுதற்குரிய தமிழின முன்னோர்களையும், தமிழ்த் தலைவர்களையும் உண்மைக்குப் புறம்பான அவதூறு பொய்ப்பரப்புரைகள் மூலம் திட்டமிட்டு அவமதித்து வருவது தமிழர் வரலாற்றைத் திரிக்கும் வெளிப்படையான சூழ்ச்சியேயாகும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் ஆங்கிலம் அறிந்த ஒருவர்கூட இல்லையா? அத்தனை கவனக்குறைவாகவா அரசுத்தேர்வாணையம் செயற்படுகிறது?

இப்படி வீர வசனம் பேசுறீங்க; முதல்வர் வீட்டுக்கு சென்று பம்முனது யாரு? சீமானை விளாசிய விஜயலட்சுமி!

இப்படி வீர வசனம் பேசுறீங்க; முதல்வர் வீட்டுக்கு சென்று பம்முனது யாரு? சீமானை விளாசிய விஜயலட்சுமி!

விளாசிய சீமான்

அல்லது திமுக அரசால் திட்டமிட்டு வேண்டுமென்றே இதுபோன்ற கேள்விகள் திணிக்கப்படுகிறதா? திராவிட முன்னவர்களான பெரியார், அண்ணா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து இதுபோன்று அலட்சியமாகத் தவறான கேள்விகளைக் கேட்க முடியுமா?

ஐயா வைகுண்டரை இழிவுப்படுத்திய திமுக; பொதுமன்னிப்பு கேட்கனும் - சீமான் | Seeman Slams Dmk For Ayya Vaikundar Issue

அதை திமுக அரசுதான் அனுமதித்து வேடிக்கைப்பார்க்குமா? உண்மைக்குப் புறம்பான இதுபோன்ற பொய்ப்பரப்புரைகளால் பேரருளாளர் முடி சூடும் பெருமாள் ஐயா வைகுண்டரின் பெரும்புகழை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.

ஆகவே, தமிழ்மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரைத் திட்டமிட்டு இழிவுபடுத்தியதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற அவதூறான கேள்வியை உருவாக்கியவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனிவரும் காலத்தில் அரசுத்தேர்வுகளில் இதுபோன்ற திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் இடம் பெறாமல் கவனமுடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.