செல்ல தம்பி பாதியிலேயே விட்டுட்டு போய்ட்டான்....உருக்கமாக பகிர்ந்து கொண்ட சீமான் ..!!
நடிகர் மாரிமுத்து உயிரிழந்துள்ள நிலையில், அவருடன் தனக்கும் இருக்கும் நினைவுகளை நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் மாரிமுத்து மரணம்
எதிர்நீச்சல் தொடரின் மூலம் மிக பெரிய உச்சத்தை அடைந்த நடிகர் மாரிமுத்து, இன்று திடீரென காலை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார். திரையுலகினரையும், சின்ன திரை நடிகர்களும், ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு பல பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.
என்னுடைய அன்பு தம்பி
இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மாரிமுத்துவின் மறைவு தனது பெருத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டு, தனிப்பட்ட முறையில் மாரிமுத்துவும் தானும் அண்ணன் தம்பி போல பழகி வந்ததாக தெரிவித்தார்.
அவரது கையெழுத்து ஓவியம் போல் இருக்கும். அனைவரும் ஒரே குடும்பம் போல் பழகிவந்தோம். இருவரும் கிராமிய மண்ணை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குமிடையே ஒரு இனம் புரியாத பாசம் இருந்தது.
நடிப்பில் தான் அவர் புகழ் வெளிச்சத்திற்கு வந்தார் என்று குறிப்பிட்டு, ரொம்ப இயல்பாக நடிப்பதன் மூலமே அவர் பிரபலமடைந்தார் என சுட்டிக்காட்டினார்.
மேலும், நீண்ட நாள் இருப்பார் என எதிர்பார்த்த நிலையில், பாதியிலேயே தன்னை விட்டுட்டு போய்விட்டார் என உருக்கத்துடன் சீமான் தெரிவித்துள்ளார்.